தருமன் செய்த தவறு! மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு, பகவான் கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். ''கிருஷ்ணா, நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன். அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன். அப்படி இருக்க, பாண்டவர்கள் சூதாடி, நாட்டை இழந்து நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா?'' இதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்: ''சூதாடுவது என்பது அரச தர்மம். ஆகவே, தருமன் சூதாடியதில் தவறில்லை. ஆனால், துரியோதனன் சூதாட அழைத்தபோதே 'என் சார்பாக மாமா சகுனி ஆடுவார்’ என்று சொல்லி விட்டான். தருமனோ, 'தான்’ என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான். அவன் தனது சார்பாக என்னை அறிவித்திருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். எனவே, தருமன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்குக் காரணம்'' என்றார்.

0 comments:

Post a Comment