|
Saturday, 17 October 2015
|
|
ஆன்மீக இரகசியங்கள் !!!
#உங்கள் கையெழுத்தில் உள்ள எழுத்துக்கள் இடைவெளியில்லாமல் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கும் வண்ணம் அமைந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் தடங்கல்கள், இடையூறுகள் ஏற்படாமல் வெற்றிகரமாக அமையும்.
#உங்கள் தலையழுத்தின் பிரதிபலிப்பே உங்கள் கையெழுத்து. உங்கள் பெயரில் உள்ள எல்லா எழுத்துக்களும் நன்றாகப் புரியும்படி, பெயரைச் சுருக்காமல், எழுத்துக்களைக் குறைக்காமல் கையெழுத்து இடுவதால் ஆயுள் விருத்தியாகும்.
#நம் விரல்கள் மூலமாகப் பல தீவினை சக்திகள் உடலுள் புகுந்து நமக்குத் துன்பம் இழைக்கின்றன. எனவே, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது விரல்கள், உள்ளங் கைகளில் மருதாணி இட்டு வந்தால் எதிர்மறை தீவினை சக்திகளிலிருந்து நம்மை எளிதில் காத்துக் கொள்ளலாம்.
#மனிதன் உயிர் வாழ உணவைப் போல பெரியவர்களின் ஆசீர்வாதமும் அவசியமானதே. கூட்டுக் குடும்ப முறை மறைந்து பெரியவர்களுடன் வாழ்வது அரிதாகி விட்டதால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசு, ஆல், வேம்பு, வன்னி போன்ற மரங்களை அவ்வப்போது வலம் வந்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும்.
#ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) தூங்கு மூஞ்சி மரத்தை வலம் வந்து வணங்கி வந்தால் காரணமில்லாமல் தூக்கம் வராமல் அவஸ்தைப் படுபவர்களுக்கு சுகமான நித்திரை கிட்டும்.
#சிவாலயங்களில் மூலவருக்குப் பின்புறத்தில் கோஷ்ட மூர்த்தியாய் அருள்புரியம் அர்த்தநாரீஸ்வரருக்கு வெள்ளிக் கிழமை, பஞ்சமி திதி நாட்களில் தேங்காய் எண்ணெயால் ஐந்து எண்ணிக்கையில்
(5, 14, 23) அகல் விளக்கு தீபங்களை ஏற்றி வந்தால் கணவன், மனைவியரிடையே உள்ள மனக் குறைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை பெருகும்.
#மனிதனுடைய கர்ம வினைகளில் முன்பு சேர்த்தவை, இப்பிறவியில் சேர்ப்பவை, இனி வருபவை என மூன்று விதமான பிரிவுகள் உண்டு. சஞ்சித கர்மம் எனப்படும் முற்பிறவிகளில் நாம் சேர்த்த கர்ம வினைகளைக் களைய உதவுவதே ஆலயங்களில் நாம் காணும் இறை மூர்த்திகளின் ஆடையில்லாத தோற்றமான நிர்மால்ய தரிசனமும், கர்நாடகாவில் உள்ள கோமதீஸ்வரர் போன்ற குருமார்களின் அவதூது தரிசனமும்.
#காரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு வகை உணவுகளை பன்றிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நீர் மூலம் பரவும் காலரா, மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் உங்களைத் தாக்காது.
#நீங்கள் எந்தப் பொருளைப் பார்த்தாலும் உங்களுடைய புண்ணிய சக்தி அந்தப் பொருளுக்குச் சென்று கோண்டேயிருக்கும். ஆனால், கடவுள் சிலைகள், இறை ஓவியங்கள், கோபுரங்கள், கோயில் தெப்பக் குளங்கள், மூலிகை மரங்கள், தல விருட்சங்கள் இவற்றைப் பார்க்கும்போது அந்தப் புனிதப் பொருட்களிலிருந்து புண்ணிய சக்திகள் கண்கள் மூலமாக உங்களை வந்தடையும்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment