முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.
யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர்.
ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.
அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.
ஓரு மகன் சொன்னான்,
“நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”
வியாபாரி கேட்டான்.
“எப்படி?”
“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.
இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”
இன்னொரு மகன் சொன்னான்.
“நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான்.
“எப்படி?”
“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.
அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன்.
ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”
வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.
மூன்றாம் மகன் சொன்னான்,
“நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான்.
“எப்படி?”
“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன்.
அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார்.
நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.
அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாக
வும் இருக்கும் என்று தெரிவித்தேன்.
அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”
அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.
மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம்.
சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும்.
அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.
முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.
ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது.
புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.
ஆனால்,
இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.
மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான்.
அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான்.
அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல.
புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.
எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள்.
முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.
பார்வையை விரிவுபடுத்துங்கள்.
புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள்.
சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள்.
பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும ் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.
"முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.
பார்வையை விரிவுபடுத்துங்கள் “
கனகதாரா ஸ்தோத்ரம்
அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:
முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:
ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநி
கபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:
பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:
காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:
ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:
விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:
இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:
தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:
கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை
ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை
நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை
நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்ல
பாயை
நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபா
யை
சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே
யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே
ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்
திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்
கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:
ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா
கோடிகளில் பணம் புரள வைக்கும் - லஷ்மி பூஜை !!
எப்படி விதி என்ற ஒன்று , யாராலும் வரையறுக்கப்பட முடியவில்லையோ - அதேபோலே தான் - கடன் தொல்லையும். எப்பொழுது கடன் தீரும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல், தவிக்கும் ஏராளமானோரை எனக்கு தெரியும். கந்து வட்டி கும்பலிடம் மாட்டிக்கொண்டு, முழி பிதுங்க - வாங்கிய அசலை விட ஐந்து மடங்கு வட்டி கட்டி , தப்பி வந்தவர்களை --- வந்த பிறகு அவர்கள் முகத்தில் தெரிந்த - sign of relief - மகிழ்ச்சி , விவரிக்க இயலாதது.
கடன் , அதன் முழு வீர்யம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் - அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
தற்கொலை வரை முயன்று - அதன் வாயில் இருந்து மீண்டு கரை சேர்ந்தவர்களும் உண்டு. குடும்பம். மனைவி குழந்தைகள் என அனைவரையும் பிரித்து - அநாதை போன்ற அமைப்பையும் - இந்த கடன் ஏற்படுத்தி விடுகிறது.
என்னிடம் - ஜோதிட ஆலோசனை கேட்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் - துளியும் தயங்காமல் நான் பரிந்துரைப்பது - கனகதாரா ஸ்தோத்ரம்.
காலை ஐந்து மணிக்கு - குளித்து முடித்து - முழு நம்பிக்கையுடன் - இந்த ஸ்தோத்திரத்தை , பாராயணம் செய்தால் - 100 % சதவீதம் நீங்கள் கடனிலிருந்து தப்பலாம்.
இதை நான் மிகுந்த ஆய்வுக்குப் பின் - நான் நமது வாசகர்களிடம் பரிந்துரைக்கிறேன். எந்த ஒரு விஷயமும் தொடங்கும் முன், உங்களுக்கு முழு நம்பிக்கை , அவசியம். காலை பிரம்ம முஹூர்த்த வேளை யில் கண் விழித்து , உடலை சுத்தமாக்கி - நீங்கள் செய்யும் எந்த செயலும் , உங்களுக்கு முழு பலன் அளிக்கும். அது, உடற் பயிற்சி யாக இருந்தாலும் சரி, படிப்பது , வித்தை பயில்வது போன்ற எந்த செயலாக இருந்தாலும் சரி.
இப்படிப் பட்ட சூழலில் , நீங்கள் கனகதாரா ஸ்தோத்ரம் துதிப்பது - உங்களுக்கு மன வலிமை அளித்து , கடன் அடைப்பது ஒன்றே உங்கள் முழு முதல் குறிக்கோள் என்ற எண்ணம் ஏற்படுத்தி , அதற்குரிய வழிகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. மிக மிக அபூர்வ , அதிர்வு ஏற்படுத்தும்
அற்புத வழிமுறை இது.
நமது தளத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள கனக தாரா ஸ்தோத்ரம் - முழு பாடலையும் பார்க்க "கிளிக்"கவும் ... kanaka thaara Stothram
http://www.goddessgift.com/images/
goddess-Lakshmi.jpg
சரியாக - 48 நாட்கள் இடை விடாமல் - இந்த கனக தாரா ஸ்தோத்ரம் பாராயணம் செய்தால் - நீங்கள் உங்கள் கடன் அடைந்து , நிம்மதிப் பெருமூச்சு விடுவது உறுதி. அப்படி ஒரு மண்டலம் நீங்கள் செய்யும்போது , இடையில் வரும் வெள்ளிக் கிழமைகளில் , நீங்கள் மகா லட்சுமி பூஜையும் செய்வது உங்களுக்கு மேலும் நன்மை பயக்கும். மகாலட்சுமி பூஜை செய்வது பற்றி , இணையத்தில் தேடும்போது - கீழே உள்ள விவரங்கள் கிடைத்தன. மிக சுலப வழியாக இருக்கவே , அதையும் கொடுத்துள்ளேன்.
வெள்ளிக்கிழமைகளில் இப்பூஜையை செய்து பலன் அடையலாம். இதற்கு வேண்டிய பொருட்கள்:
குத்து விளக்கு , உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் - ஒரு சிறு பாத்திரத்தில் , பால் - ஒரு கிண்ணம் (சுத்தமான வெள்ளி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் - வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் - ஒரு கிண்ணம் , குங்குமம் , சந்தனம்/மஞ்சள் ,
பெரிய தாம்பாளம், லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு / அல்லது சிறிய மகா லக்ஷ்மி விக்ரகங்கள்
சர்க்கரை பொங்கல் , முளை கட்டிய கருப்பு கொண்டை கடலை (சுண்டல் ) - (பூஜைக்கு முன் நாள் காலையிலே கடலைகளை ஊற வைத்து விடுங்கள்)
பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.
குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள். மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம். குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள். இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள். ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம். பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம்.
லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே மனம் ஒன்றி படியுங்கள். படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டை கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள். பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள். முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.
பணத்தை மதித்து - நடந்தாலே அவர்களுக்கு - மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிட்டும்.
http://www.livingextra.com/2011/04/blog-post_21.html
அதிசய தமிழ்ப் பாடல்!
வில்லிப்புத்தூரார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர்.

அவர் வருவோர் போவோர் எல்லாரையும் வாதத்திற்கு அழைப்பார். அதில் தோற்பவர் பாடு திண்டாட்டம் தான். தோற்றுவிட்டால் தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் துரட்டியால் ஒட்ட அறுத்து விடுவார். இதனால் காது இல்லாதவரைக் கண்டால் இவர் வில்லிப்பூத்தூராரிடம் வாதில் தோற்றவர் என தெரிந்து கொள்ளலாம். இதனால் புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல அஞ்சியிருந்தனர்.
எந்த வில்லனுக்கும் அதி வில்லன் ஒருவர் இருப்பார் இல்லையா? இருந்தார். வில்லிப்பூத்தூராரின் ஆணவம் அழியும் காலம் வந்தது.
தமிழ் அழகன் முருகனைப்பாடும் அருணகிரிநாதர் அந்த ஊருக்கு வந்தார். ஒரு புலவர் வந்தது அறிந்த வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரையும் வாதுக்கழைத்தார்.
அருணகிரிநாதர் சம்மதித்து விட்டார். ஒரு புது கட்டளையும் போட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். வென்றவர் தொரண்டியை ஒரு இழுப்பு. தோற்றவர் காது அறுந்து வந்துவிடும்.
வில்லிப்புத்தூராருக்கு கிலி வந்துவி்ட்டது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் சம்மதித்துவிட்டார்.
போட்டி ஆரம்பமாகியது.
54வது பாடலை அருணகிரிநாதர் பாடினார்.
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”
பாடி முடித்து அதன் பொருள் கேட்டார்.
வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் விட்டார்.
எத்தனை பாடலை பாடியிருப்போம். எத்தனை பேரின் காதை அறுத்திருப்போம்.
ஆனால் இப்பாடல் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.
தோல்வியை சம்மதிப்பதைத்தவ
ிர வேறு வழியில்லை. காதை இழக்கப்போவது உறுதி.
அவரது ஆணவம் அழிந்தது. தோல்வியை ஒப்புக்கொண்டார். பாடலுக்கு விளக்கம் கேட்டார்.
அருணகிரிநாதரோ போட்டிவிதி்ப்படி அவர் காதை அறுக்கவில்லை. மேன்மக்கள் மேன்மக்களே.
அந்த பாடலுக்கான விளக்கம் இதுவே.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுட
ைய
தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதெ
ன்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்
இவ்வகைப்பாடல்கள் “ஏகாக்ஷரப் பாடல்” என்று சொல்வார்கள். ஏகம் என்றால் ஒன்று. அக்ஷரம் என்றால் எழுத்து. ஓரெழுத்து பாடல்.
அப்பாடல் அருணகிரிநாதரின் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல்.
அதிசயம் அதிசயிக்கும்.!!!
தமிழ் உலக மொழிகளில் எல்லாம் சிற்ந்தது என்பதற்க்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்.