உங்கள் காலத்திற்கு பின்னால் என் நிலைமை?
குரு மரண படுக்கையில் இருந்தார்..அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.
குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்..
“குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது.
உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும்.
எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.
நாட்கள் சென்றன...தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா எனஎண்ணினான்..குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.சிஷயன் ஞானம் அடைந்தான்..
நாட்கள் சென்றன...சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல்கலகம் செய்தனர்.மீண்டு
ம் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...
நாட்கள் சென்றன...தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.
சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..அதில் எழுதி இருந்த வாசகம்...“இன்னொரு முறை முயற்சி செய்”-
சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்..குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.
எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்துகொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்.
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே: அதன் அர்த்தம் இதுதான் !
அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.
அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர் இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.
சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான்.
இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.
இதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.
அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான்.
ஏது மறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.
சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்சுனன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூறனார்.
அதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.
ஆச்சர்யப்பட்டான் அர்சுனன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை!..
வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக்
கேட்டான்?
எனக்கும் தெரியவில்லை..?
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.
அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா என கேட்டான்…?
உடனே தனக்குள் யோசித்த இவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.
அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும்முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…!
உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.
அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர். அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.
அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்சுணன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…?கண்ணனும் சிரித்துக்கொண்ட
ே…!
இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.
அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.
ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.
ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….!!
அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார். இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.
சனிப்பெயர்ச்சியால் தோஷமா.. இனி கிடையவே கிடையாது!
தசரத மகாராஜா அயோத்தியை ஆண்ட வேளை அது. அப்போது, சனிபகவான் ரோகிணிநட்சத்திர
த்தை கடக்க இருந்தார். இதனால், தேசத்துக்கு ஆபத்து வரும் என்று மந்திரிபிரதானிக
ளெல்லாம்,தசரதரிடம் முறையிட்டனர். என் தேசத்துக்கு ஒருகிரகத்தால் ஆபத்தா? அதைத் தடுத்து, என் மக்களைக் காப்பாற்ற அதற்காக என்ன விலையும் கொடுப்பேன்? என்று ஆர்த்தெழுந்தார் தசரதர்.
உடனே தன் பறக்கும் தேரை எடுத்தார். வில் அம்பு ஏந்தி சனியின் லோகத்திற்கே சென்று விட்டார். அதிர்ந்து போனார் சனீஸ்வரர்.என்னைப் பார்த்தாலே எல்லாரும் ஓடும் வேளையில், நீர் இங்கே வந்திருக்கிறீரே! யார் நீர்? எப்படி வந்தீர்! எதற்காக வந்தீர்? என்று கேள்விகளை அடுக்கினார் சனீஸ்வரர்.சனீஸ்வரரே! உம் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. உம்முடைய கிரக சஞ்சாரத்தால், எமது தேசத்துக்கு ஆபத்து என்று மந்திரிகள் உரைத்தார்கள். அதைத் தடுக்கவே, உம்மைத் தேடி வந்தேன், என்றார் தசரதர்.சனீஸ்வரர் மகிழ்ந்து போனார்.
தசரதரே! என் கிரக சஞ்சார காலத்தில், எவரொருவர் பொதுநலன் கருதி பணி செய்கிறாரோ, பிறருக்கு நன்மை செய்கிறாரோ, கடமையைக் கருத்துடன் செய்கிறாரோ... அவர்களை நான் அண்டவே மாட்டேன். மக்களுக்காக, இங்கே வந்து என்னுடன் போரிடவே துணிந்துவிட்ட உம்மை வாழ்த்துகிறேன். உம் தேசத்தை ஏதும் செய்யமாட்டேன், என்றார். தசரதர் மகிழ்ந்தார். தனக்கு அருள்செய்த சனீஸ்வரரை ஸ்லோகங்களால் அர்ச்சித்தார். அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கம் தந்துள்ளோம். இதைப் பக்தியுடன் படிப்பதுடன், பிறருக்கு நன்மையும் செய்தால், ஏழரை, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச்சனியால் பீடிக்கப்படும் ராசியினரை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார்.
ரவுத்திரன், இந்திரியத்தை அடக்குபவன், பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரியபுத்திரன் என்னும் பலவித திருநாமங்களை கொண்ட சனீஸ்வரரே!
சகல பீடைகளையும் போக்குபவரே! சூரிய புத்திரரே! உமக்கு நமஸ்காரம்.ஊ கெட்ட ஸ்தானங்களில் இருக்கும் போது தேவர்கள், அசுரர்கள், கிங்கரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், பன்னகர்கள் முதலியோரையும் துன்புறுத்தும் சூரியனின் மைந்தனே! உம்மை வணங்குகிறேன்.
மனிதர், அரசர், பசுக்கள், சிங்கங்கள், காட்டிலுள்ள புழுக்கள், பறவைகள், வண்டுகள் முதலிய அனைத்துமே உம்மால் பீடிக்கப்படுகின்றன. அத்தகைய சக்தி படைத்த சனீஸ்வரரே! உமக்கு என் வணக்கம்.
நீங்கள் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் காலத்தில் நாடு, நகரம், காடு, படை என அனைத்தும் துன்பத்திற்கு ஆளாகின்றன. அத்தகைய ஆற்றல் மிக்க சக்தி படைத்தவரே! உம்மைப் போற்றுகிறேன்.
சனிக்கிழமையில் எள், உளுந்து, சர்க்கரை அன்னம் இவற்றை தானம் அளிப்பதாலும், இரும்பு, கருப்பு வஸ்திரம் இவற்றை தர்மம் செய்வதாலும் மகிழ்ச்சி அடைபவரே! சூரிய குமாரனே! உம்மைத்தியானிக்கிறேன்.
சூட்சும வடிவிலும், பிரயாகை என்னும் திருத்தலத்திலும், யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிக்கரைகளிலும், குகைகளிலும் இருக்கும் யோகிகளின் தியானத்திற்கு காரணமானவரே! உம்மை வணங்குகிறேன்.
சனிக்கிழமையில் வெளி இடத்தில் இருந்து தன் வீட்டை அடைபவன் சுகம் அடைவான். சனியன்று வீட்டை விட்டுக் கிளம்ப முடிவெடுத்திருப்பவர், திரும்பவும் அந்த செயலுக்காக செல்லும் தேவை உண்டாகாது. (அதேநாளில் அந்தச் செயல் வெற்றிகரமாக முடிந்து விடும்) இத்தகைய சக்தியைத் தந்துள்ள சனீஸ்வரரே! உம்மைப் போற்றுகிறேன்.
படைப்புக் கடவுளான பிரம்மாவாகவும், காத்தல் கடவுளான விஷ்ணுவாகவும், சம்ஹாரம் செய்யும் சிவனாகவும், ரிக், யஜூர், சாம வேதங்களின் வடிவமாகவும்விளங்குபவரே! உம்மைவணங்குகிறேன்.
திருக்கோணத்தில் இருப்பவரே! பிரகாசம் மிக்கவரே! கருப்பு நிறம் உடையவரே! பயங்கரமானவரே! அழிவைச் செய்பவரே! அடக்குபவரே! சூரியனின் மகனே! ராசிகளில் தாமதமாக சஞ்சரிப்பவரே! மந்த கதி உள்ளவரே! பிப்பலாதரால் துதிக்கப்பட்டவரே! இந்ததிருநாமங்களால், காலையில் எழுந்ததும் சொல்லி உம்மை வணங்குபவர்க்கு தோஷம் நீங்குவதோடு சகலசவுபாக்கியமும் தர வேண்டும். சனீஸ்வரரே!
தசரதனாகிய என்னால் பாடப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தினமும் மனத்தூய்மையுடன் சொல்பவர்களுக்கு, நல்ல குழந்தைகள், பசுக்கள், செல்வம், சொந்தபந்தம் என சகல சவுபாக்கியமும் தர வேண்டும். வாழ்வுக்குப் பின், மோட்சம் அளிக்க வேண்டும்.
http://hindutemples-iyyappan.blogspot.in/
108 திவ்யதேச ஸ்தலங்கள் புத்தகத்து டன் சந்திக்கிரேன்.
சிறப்பம்சங்கள்: படிக்க வசதியாக பெரிய எழுத்தில் Navigational Bookmarks
படிப்பதை எளிதாக்க பாசுரங்கள் , பெயா்கள் எல்லாம் தனி தனி கலரில் காட்டப்பட் டுள்ளது.
சோழநாடு, பாண்டிய நாடு போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களை யும் ஒரே மேப்பில் பார்க்கும் வசதி.
நவதிருப்பதி , திருநாங்கூர் திருப்பதிகளை ஒரே மேப்பில் பார்க்கும் வசதி.
நீங்களே உங்கள் இஷ்டப்படி மேப் தயாரித்துக ் கொள்ள வழிமுறைகள் மற்றும் latitude, longitude data.
கோயிலை தரிசிக்கும் போது சொல்ல வசதியாக ஸ்லோகங்கள் இனைப்பாக தரப்பட்டுள்ளன.
திருப்பாவை , விஷ்னுசகஸ் ரநாமம் போன்ற பெரிய ஸ்லோகங்களும் உள்ளன.
வழக்கம் போல் எல்லா படங்களுடனு ம், படங்கள் இல்லாமலும் இரண்டு PDF தரப்பட்டுள்ளது. படித்து பயன் பெறவும்.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
பதிவிரக்கம் -டவுன்லோட் செய்ய லிங்க் :-
Without Image (3 mb)
https://drive.google.com/file/d/0B8RGa1-M-UwaUkh5MHVXTnBMSVk/view
With Image (17 mb)
https://drive.google.com/file/d/0B8RGa1-M-UwaZFh3WTNYZ0NvdWs/view
தகவல் நன்றி :- http://www.penmai.com/
forums/devotional-books/96117-108.html#i
xzz41i21hOCl
ஏராளமான ஆன்மீக தகவல்கள் !!!
http://www.tamilhindu.com/
இத்துடன் தெய்வத்தின் குரல் ஏழு பாகங்களும் pdf வடிவில்.!!!
https://drive.google.com/file/d/0B8RGa1-M-UwaODFlbjNKTTRyUVU/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B8RGa1-M-UwaemMtVXZNZzhaOTg/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B8RGa1-M-UwaX0NWYXBJYzY5NVE/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B8RGa1-M-UwaRDdjVDZ4dFB5LVE/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B8RGa1-M-UwaUHVvbzNTRGZNc3c/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B8RGa1-M-UwaRmE1cWVNSld2ckE/view
https://drive.google.com/file/d/0B8RGa1-M-UwaOXVqeWx1dHJkcnc/view