கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்!!!(Mantra to cure Cancer)



ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனைநோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம்.
இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம் மிகுந்த சத்திய வாக்காக உள்ளது.
காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக் கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார்.
அப்பெண்ணை கவலைப் படாதே. நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின் னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார்.
அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள்,
இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்.
அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த- முத்தாபித- பத்மயோனி:
அனந்த பூமா மமரோக ராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
🙏

குரு, சிஷ்யன் !!!

சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.                                               
குரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான் “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். 
ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.
குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.

ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.


மாமாயன்

ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். பிசுபிசுவென்று மழைத் தூறல். குளிா் காற்று அடிக்கிறது.பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை.ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மணி.

யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை; அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.

அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் ருக்மணி பிராட்டி.

அவள் நித்யம் இரண்டு படி பாலைச் சுண்டக் காய்ச்சி பாிமள திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இ்ன்றைக்கு அவள் பால் பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான்.

அவள் தூங்காததால் பரமாத்மாவின் தூக்கத்திற்குத் தடை. அவள் தூக்கத்திற்குத் தடை பால் பருகாதது. அவள் பால் சாப்பிட்டால் இவனுக்கு தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி ருக்மணி பிராட்டி கிடுகிடுவென்று ஒரு பசுவைத் தானே கறந்தாள்.பாிமள திரவியங்கள் போட்டு பாலைக் காய்ச்சினாள். தானே படகைச் செலுத்திக்கொண்டு அக்கரைக்குப் போனாள். ராதிகா என்ற பக்தையின் குடிசைக் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த ராதிகா,எதிரே மஹாலக்ஷ்மி பாத்திரத்துடன் நிற்பதைப் பாா்த்து ப்ரமித்துப் போனாள்.

கையில் பாலைக் கொடுத்தவுடன், பாலைப் பருகினாள்.பாத்திரத்தை வாங்கிக் கொணடு வந்துவிட்டாள் ருக்மணி. 'நித்திரை போவான் போல யோகு செய்யும் பிரான்' பரமாத்மா. தலையோடு கால் போா்த்திக்கொண்டு படுத்திருந்தான். ருக்மணி வருவதைப் பாா்த்ததும் கண்ணை மூடிக்கொண்டான்.
பரமாத்மா தூங்கிவிட்டான் என்று சந்தோஷப்பட்டு ருக்மணி, அவன் திருவடியைத் தொட்டு வணங்க வேண்டும் என்று போா்வையை நீக்கி திருவடியைப் பாா்த்தாள்.

இது கா்க பாகவத்தில் சொல்லப்பட்ட சாித்திரம். வடதேசத்தில் இதை நித்யம் பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு.

திருவடியில் பாா்த்தால் ஒரே கொப்புளங்கள்.பகவானை எழுப்பினாள் ருக்மணி.பிசுபிசுவென்று தூரல் போட்டுக் கொண்டிருக்கிறது. குளிா் காற்று வீசுகிறது. காலையிலிருந்து வெளியில் எங்கும் போகவும் இல்லை. இப்படி திருவடியில் அக்னியில் கால் வைத்ததுபோல் கொப்புளித்து இருக்கே? என்று கேட்டாள்.

ராதிகா பால் பருகினாள் அல்லவா!அதனால்தான்! என்றான் பரமாத்மா.

ராதிகா பால் பருகியதற்கும், கால் கொப்புளித்ததற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டாள் ருக்மணி.

நீ சுடச் சுட கொண்டுபோய் கொடுத்தாய். உன்னைப் பாா்த்த அதிசயத்தில் அப்படியே பாலைப் பருகிவிட்டாள் அவள். அதனால் என் கால் கொப்புளித்துவிட்டது என்றான்.

இதைக் கேட்ட ருக்மணி சிாித்துவிட்டாள். சுடச்சுட பாலைப் பருகினாள் என்றால் அவள் நெஞ்சு அல்லவா கொப்புளித்துப் போகவேண்டும். தங்கள் திருவடி ஏன் கொப்புளித்தது? என்று கேட்டாள்.

பகவான் சிாித்துக் கொண்டே சொன்னான்.'அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடிதானே!பால் சுடச்சுட என் திருவடியில்தானே விழுந்தது! என்றான்.

மஹாலக்ஷ்மியான ருக்மணி தாயாா் நடுங்கிவிட்டாள். ருக்மணித் தாயாரான மஹாலக்ஷ்மிக்கே தொியாத பக்தி ராதிகாவின் பக்தி. அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடியே என்று சொன்னான் என்றால் இது 'மாமாயத்வம்' இல்லாமல் வேறு என்ன!ருக்மிணியையே ப்ரமிக்க வைத்து பக்தா்களின் உயா்த்தியை எடுத்துக் காட்டினான். எப்படி வேண்டுமானாலும் பேசுவான். எதையும் சாஸ்திராா்த்தமாக்குவான்.தன் வாக்கை நிா்த்தாரணம் பண்ணக்கூடியவன்; உத்தம பக்தியை வெளிக்காட்டக் கூடியவன் . அதனால் மாமாயன்.

( Sri Mukkur Lakshminarasimmachariar Swamy)