Benefits of Onion!!!

வெங்காயத்தின் நன்மைகள் :- ++++++++++++++++++++++++++ வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள் : இயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம். இரத்தம் சுத்தமாகும் வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம். பாக்டீரியாக்களை அழிக்கும் வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம். இதய ஆரோக்கியம் வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம். கழுத்து வலி, காது வலிநீங்கும் பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம். வயிற்று பிரச்சனைகள் முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம். குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் உங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம். துர்நாற்றமிக்க பாதம் உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம். சளி, காய்ச்சல் சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம். "கழிவின் தேக்கம் வியாதி கழிவின் வெளியேற்றம் குணம்" இயற்கையாய் இயற்கையோடு வாழ..! இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..! விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம்..! பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம்..!

ராவணன் ஏன் கொல்லப்பட்டான் மறைக்கப்பட்ட உண்மை!!!


ராவணன் ஏன் கொல்லப்பட்டான் மறைக்கப்பட்ட உண்மை




இலங்கையின் அரசன் ராவணன் ஸ்ரீ ராமரால் வதைக்கப்பட்டான் என்பது நாம் அறிந்ததே. ஆயினும் ராவணன் செய்த கர்ம வினைகளும் சாபங்களுமே அவனின் மரணத்திற்கு காரணங்களாய் திகழ்ந்தது.
ராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன். இருப்பினும் அவன் ஸ்ரீ ராமரால் வதைக்கப்பட்டதன் காரணம் அவன் செய்த பாவங்களால் ஏற்பட்ட சாபங்கள். யாரெல்லாம் ராவணனை சபித்தார்கள் என்பதனைப் பார்ப்போம் ;

ராவணனின் தங்கை சூற்பனகையின் கணவன் வித்யுத்ஜின், கால்கை நாட்டின் சேனாதிபதியாக இருந்தான். ராவணன் உலகை வெல்லும் நோக்கத்தோடு போரில் ஈடுபட்டு பல நாடுகளைக் கைப்பற்றினான். கால்கை நாட்டுடனும் போர் புரிந்தான். அப்போரில் தன் தங்கை கணவனான வித்யுத்ஜினை வதம் செய்தான். இதனால் கோபம் கொண்ட சூர்பனகை, ராவணனைப் பார்த்து "ராவணா உண் மரணத்திற்கு நானே காரணமாவேன்" என சபித்தாள்.

சூற்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அருத்ததே ராவணன் சீதையை கவரக்காரணம்.
ஒரு சமயம் இலங்கேஸ்வரன் ராவணன் சிவபெருமானை தரிசிக்க கைலாய மலைக்கு சென்றான். அங்கே நந்தி பகவானை கேலி செய்து நகைத்தலானான். கோபம் கொண்ட நந்தி, ராவணனின் அழிவிற்க்கு ஒரு குரங்கே காரணமாகுமென சபித்தார்.
குரங்கு உருவங்கொண்ட ஸ்ரீ ஹனுமான், சீதா பிராட்டியைக் காண  இலங்கை சென்றதும், ராவணன் ஹனுமானின் வாளிற்க்கு நெருப்பை மூட்டி பெரும் தவறைச் செய்தான். இதனால் ஸ்ரீ ராமனின் கடும் கோபத்திற்கு ஆளானான்.
சிறந்த சிவ பக்த்தரான ராவணன், சிவ பெருமானை கவரும் பொருட்டு கைலாய மலையை தூக்கினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, ஒரு பெண்ணால் ராவணன் மடிவான் என சபித்தாள்.
சொர்கத்தை கைப்பற்ற நினைத்த ராவணன், சொர்கத்தை நோக்கி படை எடுத்தான். அப்சரஸ்களில் பேரழிகியான ரம்பையை கண்டதும் மோகம் கொண்ட ராவணன் ரம்பையை கவர்ந்து செல்ல எண்ணினான்.

ராவணனின் சகோதரன் குபேரனின் மகனான நளகுபேரனை திருமணம் செய்யப்போகும் ரம்பை ராவணனுக்கு மருமகளாவாள். அப்படியிருக்க ரம்பையை கவர்ந்த ராவணனை சபித்தான் நளகுபேரன்.


இப்படியாக பல பாவங்களை செய்து பெரும் சாபங்களிற்க்கு ஆளான ராவணன் இறுதியில் ஸ்ரீ ராமரால் வதைக்கப்பட்டு, மாபெரும் பெயரைப்பெற்றான்.