விடுகதைகள்!!!!
மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல
பட்டை தீட்டியிருப்பான்; சாமியார் அல்ல - அவன் யார்?
2. கறுத்த ரோஜா மொட்டு, கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரித்திடும், காத்திடும் பின் சாய்ந்திடும் - அது என்ன?
3. நெஞ்சிலே ஒரு கல், வீட்டிலே ஒரு கல், வானத்திலே ஒரு கல் - அவை எவை?
4. பார்த்தவர் இருவர், எடுத்தவர் ஐவர், உண்டவரோ ஒருவர் - அவர்கள் யார்?
5. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை
கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை
வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை - அவன் யார்?
6. ஊளையிட்டாலும் ஊரைச் சுமந்து செல்வான் - அவன் யார்?
7. கல்லிலே காய்க்கும் பூ;
காய்ந்தால் மலரும் பூ:
பூவிலே இது வெள்ளைப்பூ. - என்ன பூ?
8. எண்ணெய் இல்லை; திரியும் இல்லை
ஏற்றி வைக்க ஆளும் இல்லை
ஆனாலும் தெரியுது வெளிச்சம். - அது எது?
9. கருப்பு நிறமுடையவன்
கபடம் அதிகம் கொண்டவன்
கூவி அழைத்தால் வந்திடுவான்
கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் - அவன் யார்?
10. அரிசி போல் பூ பூக்கும்.
அம்மாடி எனச் சொல்லும் காய் காய்க்கும் - அது என்ன?
*******************************************************************************

விடைகள்:
1. அணில்
2. குடை
3. விக்கல், உப்புக்கல், கறுக்கல்.
4. கண்கள், விரல்கள், நாக்கு.
5. சிலந்தி
6. தொடருந்து
7. சுண்ணாம்பு
8. சூரியன்
9. காகம்
10. மிளகாய்
2. குடை
3. விக்கல், உப்புக்கல், கறுக்கல்.
4. கண்கள், விரல்கள், நாக்கு.
5. சிலந்தி
6. தொடருந்து
7. சுண்ணாம்பு
8. சூரியன்
9. காகம்
10. மிளகாய்
தானத்தில் சிறந்தவர் !!!------KIDS ZONE
ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.
இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.
தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.
பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.
மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.
"கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று கூறினார்.
உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.
பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்

Subscribe to:
Comments (Atom)